by Vignesh Perumal on | 2025-04-20 09:22 AM
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே வயதான தம்பதியினரை தாக்கி 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி கணக்கனூரைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆரோக்கியம் (வயது 70) மற்றும் அவரது மனைவி கேத்தரின்மேரி (வயது 64) ஆகியோர் தங்களது தோட்டத்து வீட்டில் நேற்று இரவு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், தம்பதியினரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், கட்டையால் தாக்கியும் உள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த வேளாங்கண்ணி ஆரோக்கியம் மற்றும் கேத்தரின்மேரி ஆகியோரிடமிருந்து மர்ம நபர்கள் 3 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த இருவரும் உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து வருகின்றனர். வயதான தம்பதியினரை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!