by Vignesh Perumal on | 2025-04-20 09:10 AM
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா பக்திப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு பேராலயத்தின் வெளிப்புறத்தில் ஈஸ்டர் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.திருப்பலியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து போதகர்கள் உரையாற்றினர்.
பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். உயிர்த்தெழுதலின் அடையாளமாக ஆலய வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். விழாவையொட்டி பேராலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் பெருவிழா பக்தி மற்றும் மகிழ்ச்சி பொங்க நிறைவடைந்தது. இந்த புனித நாளில் கலந்து கொண்ட பக்தர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தியை தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!