by admin on | 2025-01-29 03:51 PM
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக ராஜேந்திரன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றார். தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிசிடிவி பொருத்த வேண்டிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வரும் ஆணையர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது ஏராளமான பார்வையாளர்கள் தொடர்ந்து வந்து செல்லும் நிலையில் உள்ளே நோயாளிகள் வரும் வழி வெளியே செல்லும் வழி பச்சிளம் குழந்தைகள் பிரிவு மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றி பார்த்து காவலர் அறையில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசனிடம் கேட்டறிந்தார்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!