by Muthukamatchi on | 2025-04-16 09:40 PM
திண்டுக்கல்லில் இரண்டரை வயது குழந்தைக்கு அங்கன்வாடி ஊழியர் சூடுவைத்த சம்பவம்.
திண்டுக்கல், கன்னிவாடி அருகே சுரைக்காய்ப்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி - சினேகா தம்பதியின் தர்ஷிகா ஸ்ரீ (இரண்டரை வயது) சிறுமி அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்த நிலையில் அங்கன்வாடியில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமி சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, அங்கன்வாடி ஊழியர் சிறுமிக்கு சூடுவைத்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் அங்கன்வாடி ஊழியரின் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு குழந்தை சேட்டை செய்ததால் சூடுவைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்இது குறித்து குழந்தையின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக செம்பட்டி போலீசில் புகாரளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!