by Vignesh Perumal on | 2025-04-16 09:19 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு தினமான திங்கள் அன்று (14.04.2025) அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 51 குழந்தைகள் பிறந்துள்ளன.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை 27 பச்சிளம் குழந்தைகள் பிறந்தன. இதில் 15 ஆண் குழந்தைகளும், 12 பெண் குழந்தைகளும் அடங்குவர்.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று 17 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் நேற்று 7 குழந்தைகள் பிறந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்தது மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு சிறப்பான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 51 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, இனிமையான எதிர்காலத்தை வாழ்த்தினர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.