by Muthukamatchi on | 2025-04-15 09:24 PM
எரியோடு அருகே கள் விற்பனை செய்த முதியவர் கைது, 25 லிட்டர் _கள்_ பறிமுதல் - திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை.
திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் எரியோடு பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எரியோடு அடுத்த கோவிலூர் அருகே தொக்கூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்த செல்வம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் கள் பறிமுதல் செய்து திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.