by Muthukamatchi on | 2025-04-15 08:16 PM
திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை, ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்லில் கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா கடத்திய முத்துஇருள்(31), சுரேஷ்குமார்(27), தேவயானி(28),அஜய்கண்ணன்(24), செந்தில்(49) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 37 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் முத்துஇருள், சுரேஷ்குமார், தேவயானி, அஜய்கண்ணன் ஆகிய 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம், செந்தில் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.70,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.