by Muthukamatchi on | 2025-04-15 03:58 PM
தேனி நகர் இந்து எழுச்சி முன்னணி மனு – 15.04.2025மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு,வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் 14.04.2025 அன்று நடைபெற்ற சித்திரைத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட புனித நிகழ்வாக அமைந்தது. இவ்விழாவில், உங்கள் காவல்துறையினர் நேர்த்தியான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பக்தர்கள் தடையில்லா தரிசனம் பெற வழிவகுத்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.அதே நேரத்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திருமதி ஜெயதேவி அவர்களின் அதிகாரப்பூர்வ வாகனம் நடைபயண பாதையில் நேரடியாக நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் இருபுறமும் செல்ல முடியாமல், வெயிலில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, வாகனத்தில் இருந்தவர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.இத்தகைய நிகழ்வுகள், பக்தர்களின் பக்தி உணர்வை காயப்படுத்துவதுடன், விழாவின் அமைதியான சூழலையும் பாதிக்கக்கூடியது என்பதை பணிவுடன் தெரிவிக்கிறோம்.எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியின் வாகனை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, ஏற்புடைய நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம்.பக்தர்களின் நலனே மேலானது – அதிகாரத்தின் அல்ல!ஒழுங்கும் ஒற்றுமையும் வழிபாட்டின் ஆதாரம் ஆகட்டும்!இந்த மனுவின்போது,மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி நகர தலைவர் சிவராம் நகர பொருளாளர் நாகராஜ் நகர செயலாளர் அழகுபாண்டி ஆகியோரும்தேனி நகர செயலாளர் திரு ஏழுமலையான் சுரேஷ் அவர்களுடன் இணைந்து மனுவை வழங்கினர்.