by Satheesh on | 2025-04-15 12:51 PM
நெல்லை: பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய மாணவன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.