| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சாலையில் இயக்கிய விசித்திர கார்...! போலீஸ் அதிரடி கைது....!

by Vignesh Perumal on | 2025-04-15 10:27 AM

Share:


சாலையில் இயக்கிய விசித்திர கார்...! போலீஸ் அதிரடி கைது....!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நபப் ஸ்கேக் (வயது 27) என்பவர், தனது மனைவியின் நகைகளை சுமார் 2.15 லட்ச ரூபாய்க்கு விற்று, ஒன்றரை வருடங்களாக கஷ்டப்பட்டு ஒரு படுக்கை போன்ற வடிவமைப்பில் காரை உருவாக்கியுள்ளார். அவர் அந்த காரை சாலையில் இயக்கியபோது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக (Public Nuisance) கூறி போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

நபப் ஸ்கேக், ஒரு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வித்தியாசமான வாகனங்களை உருவாக்கும் ஆர்வம் இருந்துள்ளது.

தனது கனவு காரை உருவாக்க அவர் தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளார். சுமார் ஒன்றரை வருட உழைப்பில், 2.15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சிறிய காரின் அடிப்பாகம், ஸ்டியரிங், எரிபொருள் டேங்க் போன்றவற்றை பயன்படுத்தி மரத்தாலான படுக்கை போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த காரில் மெத்தை, தலையணை மற்றும் போர்வை கூட இடம்பெற்றுள்ளன. இந்த வினோதமான காரை நபப் ஸ்கேக் ராணினகர் மற்றும் டோம்கல் ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த கார் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டோம்கல் போலீசார் நபப் ஸ்கேக்கை கைது செய்ததற்கான காரணம், அவர் உருவாக்கியுள்ள இந்த வாகனம் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இந்த வாகனத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், இது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் இயக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றவே தான் இவ்வளவு கஷ்டப்பட்டதாகவும், வைரலாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இப்படி ஒரு காரை உருவாக்கியதாகவும் நபப் ஸ்கேக் கூறியுள்ளார். தனது மனைவியின் நகைகளை விற்றது மற்றும் ஒன்றரை வருட உழைப்பு வீணாகிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நபப் ஸ்கேக்கின் மனைவி மெஹர் நெகர், தனது கணவரின் முயற்சியைப் பாராட்டியுள்ளார். அவர் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், அரசாங்கம் அவருக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் தனித்துவமான முயற்சிக்கு போலீசார் தடை விதித்தது சரியா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. தற்போது நபப் ஸ்கேக் போலீஸ் காவலில் உள்ளார். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment