by Vignesh Perumal on | 2025-04-15 09:16 AM
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் நாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி. சனி பகவான் பெயர்ச்சி ஆகும். அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு. சனி பகவான் பெயர்ச்சி ஆகும். கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு.
கோயில் நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளதாவது: "சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, கோயில் கொடியேற்றம் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறும். திருத்தேரோட்டம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும்.
இந்த அறிவிப்பின் மூலம், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் பக்தர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த தகவல்களின் அடிப்படையில் தங்களது வருகைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், திருநள்ளாறு கோயில் நிர்வாகம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 2026 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்று தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது விழாவுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.