by Vignesh Perumal on | 2025-04-15 09:00 AM
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான திண்டுக்கல் சி. சீனிவாசன், உணவு செரிமானப் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில நாட்களாக உணவு செரிமானப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.