by Muthukamatchi on | 2025-04-14 11:23 PM
தேனி யில்அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 1,495 பயனாளிகளுக்கு ரூ.10.36 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட என்.ஆர்.டி மண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,495 பயனாளிகளுக்கு ரூ.10.36 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சிறந்த சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர், பத்திரிக்கையாளர் என இந்தியாவில் பின்தங்கிய வகுப்பினரின் உரிமைகள் மற்றும் மேம்பாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில்முனைவோருக்கு கடனுதவிகளும், பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்கள். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 –ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில், சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.6.5 இலட்சம் மதிப் 13 நபர்களுக்கும், தலா ரூ.6690/- மதிப்பிலான தையல் இயந்திரம் 10 நபர்களுக்கும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 1 நபருக்கு வேலைவாய்ப்பு, தீருதவித்தொகையாக 9 நபர்களுக்கு ரூ.17 இலட்சமும், தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் சமூக பொருளாதார தொழில்முனைவு திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு தொழில் தொடங்க ரூ.15.91 இலட்சம் கடனுதவியும், PMAJAY திட்டத்தின் கீழ் 57 நபர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.60.20 இலட்சம் கடனுதவியும், தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை 163 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 21 நபர்களுக்கு ரூ.226 இலட்சம் வங்கி கடனுதவியும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 7 நபர்களுக்கு ரூ.6.42 இலட்சம் மதிப்பிலான பயிர் கடனுதவியும், 100 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 20 நபர்களுக்கு ரூ.86.36 இலட்சம் கடனுதவியும், வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.1.49 இலட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள் 17 நபர்களுக்கும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் ரூ. 69,000/- மதிப்பீட்டில் 2 நபர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை மற்றும் வெங்காய கிட்டங்கி அமைப்பதற்கு ரூ.1.63 இலட்சம் கடனுதவி 2 நபர்களுக்கும், வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைப்பதற்கு 1 நபருக்கும், ரூ,43,000/- மதிப்பிலான களை எடுக்கும் கருவி 1 நபருக்கும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.49,000/-, ஓய்வூதிய உதவித்தொகையாக 10 நபர்களுக்கு ரூ,12,000/-, இயற்கை மரண உதவித்தொகையாக தலா ரூ.55,000 வீதம் 5 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.3.25 கோடி மதிப்பீடில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் 9 நபர்களுக்கும்,
நகராட்சித்துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 54 நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பிலான உபகரணங்களும், 832 பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 8.32 இலட்சம் மதிப்பிலான உபகரணங்களும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் தலா ரூ.1.01,800/- மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் 10 நபர்களுக்கும், தலா ரூ.6359/- மதிப்பிலான தையல் இயந்திரம் 2 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட வீடுகள் 47 நபர்களுக்கும், ஊராட்சி வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் 50 நபர்களின் வீடுகள் புனரமைத்தல் என மொத்தம் 1,495 பயனாளிகளுக்கு ரூ.10,36,53,938/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர்மன்றத் தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), துணைத்தலைவர் செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா ஹனீப், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) திருமதி சரளா, உதவி இயக்குநர் (மாவட்ட தொழில் மையம்) மோகன்ராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி, திட்டக்குழு உறுப்பினர் தநாராயணபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.