by Vignesh Perumal on | 2025-04-14 12:04 PM
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14, 2025) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் அவர் தமிழ் மொழியில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: "என் தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த ஆண்டு உங்களுக்கு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும்".
பிரதமர் மோடியின் இந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து, தமிழக மக்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பையும், மரியாதையையும் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழியில் அவர் வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக பண்டிகை காலங்களில் பிரதமர் மோடி பல்வேறு மொழிகளில் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.