by admin on | 2025-01-28 02:31 PM
தேனியில் நேற்று இரவு திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது
போலீசார் சோதனையில் இரண்டு கம்ப்யூட்டர் லேப்டாப் காணவில்லை என முதல் தகவல் தெரியவந்துள்ளது. போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கட்சி அலுவலகத்தில் இரவு 11 மணி வரை ஆட்கள் இருந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தால் என்.ஆர். டி நகர் முழுவதும் பரபரப்பாக உள்ளது. மேலும் என் ஆர் டி நகர் பகுதிகளில் எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்.ஆர்.டி மஹால் பின்புறம் நடந்த இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பீதியையும் கிளப்பி உள்ளது .
இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரித்த போது இரண்டு லேப்டாப் காணவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் விசாரித்து வருகிறோம் என்று கூறினர்