by admin on | 2025-01-28 12:32 PM
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத ஆண் குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர்
திண்டுக்கல் அருகே அப்பனம்பட்டியை சேர்ந்த அரவிந்த்குமார். இவரது 9 மாத ஆண் குழந்தைக்கு பிறவியிலே கண்பார்வை சரியில்லாமல் கண்ணில் கண்புரை ஏற்பட்டது.
குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர். பரிசோதித்த கண்பார்வை பிரிவு டாக்டர்கள் லென்ஸ் பொருத்தலாமா என ஆலோசித்தனர். 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் லென்ஸ் பொருத்தமுடியும் என்பதால் முதலில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர்.
இதை தொடர்ந்து குழந்தைக்கு கண் பார்வை கிடைத்தது. 1 மாதம் பின் இடது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். இரு ஆண்டுக்கு பின் லென்ஸ் பொருத்த திட்டமிட்டுள்ளனர். அறுவை சிகிச்சை குழுவில் உள்ள டாக்டர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
போட்டோ செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!