by Vignesh Perumal on | 2025-04-14 08:15 AM
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி பன்றிமலை ரோட்டில் அமைதிச்சோலை அருகே ஒரு உடல் தீப்பற்றி எரிவதை கண்ட கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற சிலர் கன்னிவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பாதி எரிந்த நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்ணிற்கு 22 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். பெண்ணின் உடல் பெருமளவு எரிந்த நிலையில் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார், இங்கு எப்படி வந்தார் என்பதை வழித்தட கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு விசாரணை நடக்கிறது. கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.