by Satheesh on | 2025-04-13 02:11 PM
கோவை: பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மதபோதகரான இவர் 17 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு தனது வீட்டில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக காந்திபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாள்களாக தலைமறைவாக இருந்த நிலையில் அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து போக்சோ வழக்கு மத போதகர் ஜான் ஜெபராஜ்-க்கு -ஏப். 25 வரை நீதிமன்ற காவல். கோவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவு. மத போதகர் ஜான் ஜெபராஜை கோவை மத்திய சிறையில் அடைப்பதற்கான பணிகள் தீவிரம்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.