by Muthukamatchi on | 2025-04-13 12:42 PM
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார் .முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு ஆசிரியர் டாக்டர். பிலிப்ஸ் கலந்து கொண்டு, வாழ்க்கையில் அறிவியலின் பங்கு மிகவும் இன்றியமையாதது என்றும் ,நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கிப் பேசினார் .விழாவில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் சுதந்திர தின விழாக்களில் நடைபெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு களிமண் கொண்டு எவ்வாறு மண்பாண்டங்களை உருவாக்குவது என்பதை செய்து காட்டி விளக்கம் அளித்தனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா ,ராகினி, பாண்டிச் செல்வி, திவ்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.