by Muthukamatchi on | 2025-04-13 12:17 PM
நடிகர் சூர்யா அவர்களின் 50'ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாதம் ஒரு நற்பணி சமூகத்திற்கு என்ற புதிய முயற்சியின் தொடக்கமாக பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது
அகில இந்திய தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் ஆலோசனைப்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமையின் ஒப்புதலோடு, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களான அகிலன் மற்றும் குகன் தலைமையில் நிர்வாகிகள் மாய கிருஷ்ணன், மணிகண்டன், தன்வின், ஆனந்தன், புகழ்மணி, பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.