by Satheesh on | 2025-04-11 04:32 PM
பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேர்தலுக்கான விருப்பமனுவை நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்தார். பாஜக தலைவர் அண்ணாமலை முன்மொழிந்தார். வானதி சீனிவாசன், எச். ராஜா, மத்திய அமைச்சர்கள்எல். முருகன் ,கருப்பு முருகானந்தம், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேறு யாரும் வேட்பு மனு செய்யப்படாததால் நைனார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. நாளை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என தகவல்.