by Vignesh Perumal on | 2025-04-11 02:39 PM
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டம் முகமதியாபுரம் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இருப்பினும், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்தில் உள்ள சில திருத்தங்கள் இஸ்லாமியர்களின் வக்பு சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த சட்டத்தை கண்டித்து ஏப்ரல் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.