| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

திமுக அமைச்சருக்கு...! திமுக எம்பி கனிமொழி கண்டனம்...!

by Vignesh Perumal on | 2025-04-11 01:46 PM

Share:


திமுக அமைச்சருக்கு...! திமுக எம்பி கனிமொழி கண்டனம்...!

திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி விலைமாதுவை குறிப்பிட்டு பேசியது பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காக பேசப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் விலைமாதுவை குறிப்பிட்டு சில கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கனிமொழி வெளியிட்டுள்ள இந்த கண்டன அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி இதற்கு முன்னரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் விடியல் பேருந்து சேவையில் இலவசமாக செல்லும் மகளிரை "ஓசியில் பஸ்ஸில் செல்கிறீர்கள்" என்று அவர் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது மீண்டும் அவர் விலைமாதுவை குறிப்பிட்டு பேசியிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எந்த காரணத்திற்காக அமைச்சர் பொன்முடி அப்படி பேசினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனிமொழி தனது கண்டனத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment