by admin on | 2025-01-27 06:03 PM
தேனி மாவட்டம் கூடலூர் மலையடிவாரப் பகுதியில் விவசாயபணிக்காக சென்ற கூடலூரைச் சேர்ந்த விவசாயியை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
கூடலூர் வனப் பகுதியை ஒட்டிய மலை அடிவாரப் பகுதிகளில் தனியார் பட்டாக்காடுகள் அதிகமாக உள்ளது. அப்பகுதிகளில் மானாவாரி விவசாய செய்யப்பட்டு வருகிறது. கூடலூர் பெருமாள் கோவில் அடுத்துள்ள மலையடிவாரப் பகுதியில் கூடலூர் கண்ணகி நகரை சேர்ந்த விவசாயி கோபால் (60) என்பவருக்கு பட்டா காடு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை கோபால் தனது விவசாய நிலத்தில் விவசாய பணிக்காக அப்பகுதிக்குச் சென்ற போது அங்கு திடீரென்று வந்த கரடி கோபாலை சராமாரியாக தாக்கியது. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து விவசாய காடுகளில் இருந்தவர்கள் அங்கு சென்ற போது கரடி அங்கிருந்து ஓடிவிட்டது. மேலும் படுகாயம் அடைந்து கிடந்த விவசாயி கோபாலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!