by Vignesh Perumal on | 2025-04-11 08:50 AM
ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கரூர் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று (11.04.2025) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்: செங்கோட்டையில் இருந்து காலை 05:10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் இன்று கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் கரூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படாது. திருச்சியில் இருந்து காலை 07:20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 56809 திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் இன்று கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் கரூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படாது.
மாற்றம் செய்யப்பட்ட தொடக்க நிலையம்: ஈரோட்டில் இருந்து பிற்பகல் 02:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று பிற்பகல் 03:05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது.
இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத்தை இதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.