| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

பழநியில் இன்று பங்குனி உத்திர தேரோட்டம்..! என்ன சிறப்பு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-11 08:26 AM

Share:


பழநியில் இன்று பங்குனி உத்திர தேரோட்டம்..! என்ன சிறப்பு தெரியுமா...?

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர். அதாவது, பழனியில் இன்று (11-04-2025) பங்குனி உத்திரத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கல்யாணம் நேற்று (10-04-2025) மாலை 5:30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமிக்கும், வள்ளிநாயகி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் இரவு 8:30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இந்நிலையில், இன்று (11-04-2025) மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாக வடம் பிடித்து தேரை இழுக்க உள்ளனர். தேர் கிரிவீதிகளில் வலம் வரும். விழாவின் நிறைவாக இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி உலா வருவார். அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும்.

 பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் பத்து நாட்களும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கொடுமுடியிலிருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவில் தேவஸ்தானம் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது. விழாவை முன்னிட்டு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவைப் போலவே, பங்குனி உத்திரத்திலும் பாதயாத்திரையாகவும், தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.

 பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். இது தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும் கருதப்படுகிறது. பார்வதி தேவிக்கும் சிவனுக்கும், தெய்வானைக்கும் முருகனுக்கும், சீதைக்கும் ராமனுக்கும் திருமணம் இந்த நாளில்தான் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. குறிப்பாக முருகப்பெருமானின் திருமண நாளாக இது கொண்டாடப்படுவதால், முருக பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுகின்றனர். பழனியில் நடைபெறும் பங்குனி உத்திரத் தேரோட்டம் ஒரு முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திருவிழாவாகும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெறுகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment