| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பூசாரிகள் நல சங்கத்தின் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்

by admin on | 2025-01-27 06:01 PM

Share:


பூசாரிகள் நல சங்கத்தின் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்

இன்று (27/01/25) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ராமநாதபுரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்க தென் மண்டலத் தலைவர் R.சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் சந்தன குமார் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கொடுக்கப்பட்ட மனுவின் விவரம் ஒரு கால பூஜை நடைபெறும் திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க நீதிமன்றமும்  இந்து சமய அறநிலையத்துறைஆணையரும் உத்தரவிட்டு அந்த உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அவர்கள் செயல்படுத்தவில்லை பூசாரிகள் நல வாரியத்தில் சீர்படுத்தி செயல்படுத்த வேண்டும் 60 வயதுக்கு மேற்பட்டுள்ள முதிய பூசாரிகள் இந்து சமய அறநிலைத்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர் இவர்கள் வருடம் தோறும் ஆளறி சான்றிதழ் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் வயது முதிர்ந்த காரணத்தினால் அவர்கள் படுக்கையில் சிலர் இருப்பதால் அவர்களால் நெடுந்தூரம் பயணம் செய்து உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆளறி சான்றிதலுக்காக   கையொப்பம் இடுவது சிரமமாக உள்ளது எனவே பூசாரிகள் அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள அஞ்சலகத்தில் ஆளறி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை  உதவி ஆணையர் அலுவலகத்தில் பூசாரி ஓய்வூதியம் வேண்டி  விண்ணப்பித்த பூசாரிகளின் விண்ணப்பம் நான்கு வருடமாக அலுவலகத்திலேயே வைத்துள்ளனர் சென்னை ஆணையருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் 

இந்து சமய அறநிலையத்துறை ராமநாதபுரம் மாவட்ட அலுவலகம் அரசு கட்டிடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இங்கனம் 

சந்தன குமார் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கோவில் பூசாரிகள் நல சங்கம்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment