by Vignesh Perumal on | 2025-04-11 07:19 AM
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: அர்த்தநாரீஸ்வரர்
அம்மன்/தாயார்: முத்தாம்பிகை
தலவிருட்சம்: புன்னை
தீர்த்தம்: அகஸ்தியர் தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞானபோத புஷ்கரணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம்
ஊர்: ரிஷிவந்தியம்
மாவட்டம்: விழுப்புரம்
திருவிழா: ஆனியில் பிரம்மோற்சவம் பத்து நாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மூன்றாவது திங்கள் கிழமையில் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்படுகிறது
தல சிறப்பு: தேவர்களின் தலைவன் ஆன இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பாலபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ஆனால் அம்மனை வழிபடாமல் சென்று விடுவான் தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேக குடங்களை மறைத்து வைத்து விட்டார் பால் கூடங்களை காணவில்லை என வருந்திய இந்திரன் அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்தான் அப்போது தோன்றிய ஈசன் இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி பணித்தார் அத்துடன் தினமும் நடக்கும் தேன் அபிஷேக பூஜையில் காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது அதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேன் அபிஷேக பூஜையில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக ஆண் பாதி பெண் பாதியான வடிவில் காட்சி தருகிறார் மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.