by Vignesh Perumal on | 2025-04-10 09:31 PM
தில்லி செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக இன்று காலை 9:03 மணியளவில் தில்லி தீயணைப்பு சேவைக்கு அழைப்பு வந்தது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சோதனையின் முடிவில், எந்தவிதமான வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகப்படும்படியான பொருட்களோ கண்டறியப்படவில்லை. இதையடுத்து, இது ஒரு புரளி என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இந்த மிரட்டல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் அல்லது பொருட்களைப் பார்த்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.