by Vignesh Perumal on | 2025-04-10 09:03 PM
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏப்ரல் 19-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வால் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏப்ரல் 19-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.