by Vignesh Perumal on | 2025-04-10 08:32 PM
அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை அமைதியாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. மேலும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அவரது மணி மண்டபத்தை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து, இந்த விழாவை சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அவர் அளிக்கும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
எனவே, அம்பேத்கர் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.