by Vignesh Perumal on | 2025-04-10 08:14 PM
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் உள்ள சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சுருதிகா ஸ்ரீ என்பவர் பூப்பெய்திய காரணத்தினால், அவரை வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து தேர்வு எழுதும்படி பள்ளி நிர்வாகம் கூறியதாக செய்திகள் வெளியாகின. மேலும், அந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்!" இதன் மூலம், அந்த மாணவிக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும், இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார்.
"அ.தி.மு.க. அதிருப்தி தலைவர்களை இனி சந்திக்க மாட்டேன்"...!
சுயஉதவிக் குழுக்கள்...! ரூ.64.74 கோடி...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு....!
கோயில் வளாகத்தில் சிலுமிசம்..! கம்பால் புரட்டி எடுத்த பெண்...!
சர்ச்சையை கிளப்பிய அ.தி.மு.க. பேனரால்...! அரசியலில் பெரும் பரபரப்பு...!
திருட்டுப் போன பொருட்கள் மீட்பு..! மகிழ்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்...!