by Vignesh Perumal on | 2025-04-10 12:15 PM
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தம்பதியை கட்டி போட்டு பணம், நகை கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் தீவிரமாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தளவாய்பட்டியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர், மகாலிங்கம் மற்றும் கமலவேணி தம்பதியை கட்டிப் போட்டு நகையை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பார்சல் ஒட்ட பயன்படுத்தப்படும் செலோடேப் மூலம் இருவரையும் கட்டி போட்டு கொள்ளை அடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பீரோவில் இருந்த 15 சவரன் நகை, கமலவேணி அணிந்திருந்த 5 பவுன் செயின், ஒரு பவுன் தோடு உள்ளிட்டவையும் திருடி சென்றுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.