| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

குறி சொல்வதாக கூறி பெண்ணை மயக்கிய வாலிபர்...! பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு...!

by Vignesh Perumal on | 2025-04-10 10:22 AM

Share:


குறி சொல்வதாக கூறி பெண்ணை மயக்கிய வாலிபர்...! பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு...!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான ஆடலுாரில் கவிதா(42) என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வாலிபர் குறி சொல்வதாக கூறி பேச்சு கொடுத்தார். சற்று நேரத்தில் கவிதா மயங்கிய நிலையில் அவர் அணிந்திருந்த நகைகள், பணத்தை வாலிபரிடம் கொடுத்தார். 

அவர் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த கணவர் சரவணன் சம்பவம் குறித்து கேட்டறிந்து அப்பகுதியினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட வாலிபரை துரத்தி சென்று தர்மத்துப்பட்டி அருகே நான்குவழி சாலையில் டூவீலரில் சென்றவரை மடக்கிப் பிடித்துகன்னிவாடி போலீசில் ஒப்படைத்தனர். 

கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் மடத்துக்குளத்தை சேர்ந்த சூர்யா(27) என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், டூவீலர், தங்க டாலர், வெள்ளி மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment