| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

மீண்டும் 'அரசை' எச்சரிக்கும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு...!

by Vignesh Perumal on | 2025-04-10 10:13 AM

Share:


மீண்டும் 'அரசை' எச்சரிக்கும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு...!

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் பதிவு உயர்வு இட ஒதுக்கீட்டினை நடப்பு சட்டப்பேரவையில் பத்திரிகையில் வெளியிடுதல் தொடர்பாக இன்று நண்பகல் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "வணக்கம். மத்திய அரசு 30.6.2016 முதல் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீதம் (4%) இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழக அரசு கடந்த 3 ஆண்டு காலமாக இச்சட்டத்தினை நடைமுறைபடுத்தாமல் உயர் நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. எனவே இத்துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் அவர்கள் நடப்பு சட்டப்பேரவையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி செய்தியாளர்களை 10/04/2025( வியாழக்கிழமை) 12 மணிக்கு சேப்பாக்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சந்திக்க உள்ளதால் செய்தியாளர்களை அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment