by Vignesh Perumal on | 2025-04-10 09:46 AM
நாகப்பட்டினம் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் இன்று (10-04-2025) கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் ஆலப்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் பயங்கர வேகத்தில் மோதியதில் ஒரு பேருந்து சாலையோர வயல்வெளியில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த சுமார் 30 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"அ.தி.மு.க. அதிருப்தி தலைவர்களை இனி சந்திக்க மாட்டேன்"...!
சுயஉதவிக் குழுக்கள்...! ரூ.64.74 கோடி...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு....!
கோயில் வளாகத்தில் சிலுமிசம்..! கம்பால் புரட்டி எடுத்த பெண்...!
சர்ச்சையை கிளப்பிய அ.தி.மு.க. பேனரால்...! அரசியலில் பெரும் பரபரப்பு...!
திருட்டுப் போன பொருட்கள் மீட்பு..! மகிழ்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்...!