by Vignesh Perumal on | 2025-04-10 09:09 AM
கூடங்குளத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டு வட மாநில இளைஞர்கள் நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவர். இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்
கூடங்குளம் அணுகுமுறைகள் வேலைக்கு சேர வேண்டும் என்றால் மருத்துவ பகுதி சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப்படையில் வட மாநிலத்தை சேர்ந்த பல இளைஞர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் கூடங்குளத்தை சுற்றி இருக்கும் சிலர் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு ₹3000 முதல் ₹5000 ரூபாய் வரை செலவு செய்து மருத்துவ சான்றிதழ்கள் வாங்குகிறார்கள்.
அதில் கடந்த 2024 அக்டோபர் 23 அன்று கூடங்குளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஜீகேந்திர பால் என்பவருக்கும், கடந்த 2025 ஆம் ஆண்டு பிப் 11 அன்று தற்கொலை செய்து கொண்ட குல்சன் குமார் என்பவரின் பெயரிலும் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழில் இருவரும் நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முறையான விசாரணை இல்லாமல் இதில் மருத்துவர் அர்ச்சனா என்பவர் இந்த மருத்துவ சான்றிதழை வழங்கியது தெரியவந்திருக்கிறது. இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.