by admin on | 2025-01-27 01:38 PM
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கலெக்டர்சஜீவனா அவர்கள் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பாக டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் எஸ் ஐ களுக்கு விருதுகளை பாராட்டு சான்றிதழ் வழங்கினார். காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அண்ணா விருது வழங்கப்பட்டது. பெரியகுளம் டிஎஸ்பி நல்லூ சார்பு ஆய்வாளர் முருகப்பெருமாள் ஆகியோருக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டதற்காகவும் போதைப் பொருள் தடுப்பில் முழுமையாக ஆர்வம் காட்டி செயல்பட்டதற்காகவும் பெரியகுளம் பகுதிகளில் அதிக அளவில் குண்டாஸ் மூலம் பலர் கைது செய்யப்பட்டதற்காகவும் கலெக்டர் சஜீவனா வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உடன் இருந்தார். மேலும் தனிப் பிரிவு காவலர்கள் மற்றும் அரசுத் துறையில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது