| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

நாளை மத்திய அமைச்சர் தமிழ்நாடு வருகை...! எதுக்கு தெரியுமா...?

by Vignesh Perumal on | 2025-04-09 03:45 PM

Share:


நாளை மத்திய அமைச்சர் தமிழ்நாடு வருகை...! எதுக்கு தெரியுமா...?

மத்திய அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை சென்னை வருகிறார். இரண்டு நாள் பயணமாக வரும் அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை சென்னை வருகிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளார். குறிப்பாக, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தியை ஏப்ரல் 11-ஆம் தேதி சந்திக்கிறார். 

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படலாம் என்ற யூகங்கள் நிலவுகின்றன. பாஜக-அதிமுக இடையே கூட்டணி முறிந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பாஜக மத்திய தலைமைக்கு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


திமுக எதிரியாக பார்க்கப்படுவதால், அதிமுக மட்டுமே விருப்பமாக கருதப்படுகிறது. 2026 தேர்தலுக்கு முன்னரே கூட்டணி உறுதியாக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment