ஒருவர் வரி கட்டிமுடிக்க ஒரு மணி நேரம் ஆகிறது....! மாமன்ற உறுப்பினர் ஜி.தனபாலன் குற்றச்சாட்டு....!
by Vignesh Perumal on |
2025-04-09 03:10 PM
Share:
Link copied to clipboard!
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் ளவசித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, சாலைவசதி, தெருவிளக்கு, பொது சுகாதார பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டண நிலுவை தொகை செலுத்திட வேண்டும். வரிதொகையை இணையதளம் மூலம் டெபிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தி வரிசெலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜி.தனபாலன் அவர்கள் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: "திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரிகளை இந்த ஆண்டின் துவக்கத்திலே மாநகராட்சியில் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் வயதானவர்கள் கால் கடுக்க நிற்கின்றனர். ஏற்கனவே இரண்டு கவுண்டர்கள் மட்டும் உள்ளதால் ஒருவர் வரி கட்டி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது. எனவே மக்களின் சிரமத்தை குறைக்க கூடுதலாக இரண்டு கவுண்டர்களை திறந்து பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதி செய்து தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.