by Vignesh Perumal on | 2025-04-09 11:07 AM
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 25 காசுகள் குறைத்துள்ளது. இதன் மூலம் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
இந்த குறைப்பினால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். இதன் விளைவாக, வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற பெரிய கடன்களின் EMI குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் உதவும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இது வங்கிகளின் லாப வரம்பை சற்று குறைக்கலாம்.