by Vignesh Perumal on | 2025-04-09 10:21 AM
சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அவர்கள் இரங்கல் குறிப்பு வாசித்தபோது, "தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது" என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (09-04-2025) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு அவர்கள் இரங்கல் குறிப்பை வாசித்தார். மறைந்த குமரி அனந்தன் அவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ்நாடு அரசு அவருக்கு தகைசால் விருதும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும், குமரி அனந்தன் அவர்களின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.