by Vignesh Perumal on | 2025-04-09 10:02 AM
சென்னையில், வடபழனியில் 14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டி பஜார் போலீசார், சிறுவனின் தந்தை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சிறுவன் ஓட்டிய கார் மோதியதில் பாதசாரிகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் தந்தை, தனது மகனுக்கு கார் ஓட்ட அனுமதித்ததற்காகவும், கவனக்குறைவாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.