| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

8-பேரில் 6 பேருக்கு சிறை...! தீவிரமாக 2 பேரை தேடும் போலீஸ்...!

by Vignesh Perumal on | 2025-04-09 07:26 AM

Share:


8-பேரில் 6 பேருக்கு சிறை...! தீவிரமாக 2 பேரை தேடும் போலீஸ்...!

திண்டுக்கல் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 12 ஆண்டுகள் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அழகேந்திரன் என்பவரின் இடத்தை கடந்த 2016-ம் ஆண்டு மல்லம்மாள்(62), திம்மையன்(65), ராஜு(41), ஆறுமுகம்(60), துரைசாமி(57), ராமகிருஷ்ணன்(69) ஆகியோர் ஏமாற்றி அபகரித்ததாக மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல் துறையினர் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் 12 ஆண்டுகள் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி அவர்கள் 6 பேருக்கும் 12 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை, தலா ரூ.12,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment