by Vignesh Perumal on | 2025-04-09 07:11 AM
அருள்மிகு பெரியநாயகிஅம்மன் கோவில்
மாவட்டம்: சிவகங்கை
அமைவிடம்: உருவாட்டி, சிவகங்கை வட்டம்
தாயார்: பெரியநாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்: நவராத்திரி 9ம் நாள் தேரோட்டதிருவிழா
கோயில் அமைப்பு: இக்கோயிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியும், முருகன், விநாயகர், ராக்காச்சியம்மன், பைரவர், வீரபத்திரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
கட்டிய நாள்: மூன்றாம் நூற்றாண்டு