| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

ராதாகிருஷ்ணனுக்கு குற்றவாளி என தீர்ப்பு..!!!

by Muthukamatchi on | 2025-04-08 08:41 PM

Share:


ராதாகிருஷ்ணனுக்கு குற்றவாளி என தீர்ப்பு..!!!

தேனி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய  இராதாகிருஷ்ணன் அவர்கள் தேனியை சேர்ந்த  ரவிச்சந்திரன் என்பவர் நடத்திய சுதர்சன் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விவசாய கருவிகள் விற்பனை நிறுவனத்தின் மூலம் விவசாய பயனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களுக்கான மானிய தொகையினை காசோலை மூலம் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்ய முதலில் ரூ 25,000/- ரவிச்சந்திரன் அவர்களிடம் 06.03.2015 தேதியன்று  கேட்டுள்ளார் பின்னர் அதை குறைத்து ரூ.20,000 /- லஞ்சமாக கேட்டுள்ளார், லஞ்சம் கொடுத்து மானிய தொகைக்கான காசோலையை பெற விரும்பாத  ரவிச்சந்திரன் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார் அதன் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 09.03.2015 ஆம் தேதி புகாதார திரு. ரவிச்சந்திரன் இருந்து ரூ.20,000/- பணத்தை உதவி பொறியாளர் திரு ராதாகிருஷ்ணன் கேட்டு பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் பின்னர் அந்த வழக்கு தேனி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று 08.04.2025 அன்று திரு. ராதாகிருஷ்ணன்  குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அபராதம் ரூ 1,000/- விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி திரு. சரவணகுமார் அவர்கள் தீர்ப்பளித்துள்ளார் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக துணை சட்ட ஆலோசகர் திருமதி. கவிதா அவர்கள் ஆஜராகி உள்ளார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment