by Vignesh Perumal on | 2025-04-08 05:02 PM
சென்னையில் இருந்து பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு தமிழக பா.ஜ.க தலைவர் பதவி மாற்றம் குறித்த யூகங்களுக்கு மத்தியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து ஆலோசனைகள் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விரைவில் தெரியவரும்.