by Vignesh Perumal on | 2025-04-08 04:04 PM
சட்டப்பேரவையில் திருவாடனை எம்.எல்.ஏ. அரசு பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசின் நிதி நிலையை பொறுத்து இது கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்ததால் அவர்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த "விடியல் பயணம்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அரசின் நிதிநிலை சீரானவுடன் ஆண்களுக்கான இலவச பயணம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.