by Vignesh Perumal on | 2025-04-08 10:38 AM
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்று (ஏப்ரல் 8, 2025) சட்டப்பேரவைக்கு வந்தனர்.
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குகின்றனர். ஜனநாயக முறைப்படி எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்னையை எழுப்ப அதிமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்று சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.