| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Congress

குஜராத்தில் 2 நாள் கூட்டம்..! மூத்த தலைவர்கள் பங்கேற்பு...! அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்...!

by Vignesh Perumal on | 2025-04-08 09:51 AM

Share:


குஜராத்தில் 2 நாள் கூட்டம்..! மூத்த தலைவர்கள் பங்கேற்பு...! அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்...!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (ஏப்ரல் 8) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இன்று சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் செயற்குழு கூடி ஆலோசனை நடத்துகிறது. 

நாளை சபர்மதி ஆசிரமத்திற்கும், கோச்ராப் ஆசிரமத்திற்கும் இடையே சபர்மதி நதிக்கரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 1725 மூத்த நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு மற்றும் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது. 

மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் விதமாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது, வேட்பாளர் தேர்வில் மாவட்ட தலைவருக்கு அதிகாரம் வழங்குவது, தேர்தல் வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்பதை உறுதி செய்வது போன்ற அமைப்பு ரீதியான புத்துயிர் அளிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையும் குறிக்கும் வகையில் இந்த முறை குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடுவது குறிப்பிடத்தக்கது.

தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment